Published : 05 Feb 2020 09:31 AM
Last Updated : 05 Feb 2020 09:31 AM
பூடான் செல்லும் இந்தியப் பயணிகள் கடந்த சில பத்தாண்டுகளாக இலவசமாகவே அந்த நாட்டுக்குள் நுழைந்து வந்தனர். ஆனால் இனி இந்தியா, மாலத்தீவுகள், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு நீடித்த வளர்ச்சிக் கட்டணமாக நாளொன்றுக்கு ரூ.1200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 2020-ல் இந்தத் திட்டம் அமலாகிறது.
புதிய சுற்றுலாக் கொள்கையின் படி தேசியப் பேரவையில் செவ்வாயன்று இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த 3 நாட்டு பயணிகள்க்குத்தான் 17 டாலர்கள் வரை கட்டணம் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 65 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கட்டாயத் தொகையாக 250 டாலர்கள் வரை பிறநாட்டுப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
இந்தியா, பங்களாதேஷ், மாலத்தீவுகளிலிருந்து வரும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை. 6 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அடுத்து சுற்றுலாப் பயண ஏற்பட்டு நிறுவனங்கள் கவலையடைந்துள்ளன, இந்தக் கட்டணங்களால் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
அக்டோபர் மாதத்தில் பூஜா சீசனில் இந்தியாவிலிருந்து அதிகம்பேர் பூடான் செல்வார்கள், அதனால் இந்த கட்டணத்தினால் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் இவர்கள்.
பூடானுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பகுதியினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT