Published : 07 Aug 2015 05:13 PM
Last Updated : 07 Aug 2015 05:13 PM
வங்கதேசத்தில் மற்றுமொரு மதச்சார்பற்ற வலைப்பதிவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்தனர்.
மதச்சார்பற்ற கொள்கை சார்ந்த பதிவுகளை எழுதி வந்த வலைப்பதிவர் நிலாய் நீல்(40) அவரது வீட்டில் இருந்தபோது அங்கு வந்து மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்தததாக முதற்கட்ட தகவலில் போலீஸார் தெரிவித்தனர். உடனிருந்து அவரது நண்பரையும் தாக்கிவிட்டு அவர்கள் தப்பித்து சென்றனர்.
வங்கதேசத்தில் இந்த ஆண்டில் நிகழ்ந்திருக்கும் 4வது வலைப்பதிவர் படுகொலைச் சம்பவம் இது. நிலாய் நீலுக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆவிஜித் ராய் (44) என்ற வங்கதேச வலைப்பதிவாளர் படுகொலை செய்யப்பட்டார். டாக்காவில் நடந்த புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த அவரை ஒரு கும்பல் தாக்கி கொலை செய்தது.
வலைப்பதிவில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதால் அவரை கொலை செய்ததாக `அன்ச ருல்லா பங்களா’ என்ற அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. இவரைத் தொடர்ந்து வாசிகுர் ரகுமான் (24) , அனந்த பிஜோய் தாஸ் (33) என அடுத்தடுத்த படுகொலைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT