Last Updated : 31 Jan, 2020 10:06 AM

1  

Published : 31 Jan 2020 10:06 AM
Last Updated : 31 Jan 2020 10:06 AM

கரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலை பிரகடனம்

பீஜிங்

சீனாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

சீனாவில் வூஹாங் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் அந்நாட்டின் இரு மாகாணங்கள் உட்பட உலகின் 15 நாடுகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. இது உயிருக்கு ஆபத்தான கொடிய நோயாக இருப்பதால் உலகின் பலநாடுகளிலும் பீதி நிலவுகிறது. அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, பாக்., தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியதையடுத்து உலக சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.

சீனா தவிர்த்து 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

2009 - எச்1என்1(H1N1) 2014 - போலியோ 2014 - எபோலா (வட ஆப்ரிக்கா) 2016 - ஜிகா 2019 - எபோலா (காங்கோ) ஆகிய 5 தருணங்களில் உலகச் சுகாதார அமைப்பு அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளது.

சீனாவில் கரோனா வைரசால் 170 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். 7,700க்கும் அதிகாமானோருக்கு நோய் பாதிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேகமாக பரவும் கரோனாவால் உலகின் பல பகுதிகளிலும் பீதி நிலவுகிறது. சீனாவின் முக்கிய பல நகரங்களிலும், ஹாங்காங்கிலும் கூகுளின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடிவிட்டது. சீனாவில் இருந்து திரும்பிய கேரள மருத்துவ மாணவிக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தயார் நிலையில் இருக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு எச்சரித்துள்ளது.

“பலவீனமான சுகாதார, மருத்துவ வசதிகள் கொண்ட ஏழை நாடுகளுக்குப் பரவினால் என்ன செய்வது என்று தாங்கள் கவலைப்படுகிறோம்” என்று ஐநா சுகாதாரப்பிரிவு கவலை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸுக்கு சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x