Published : 09 Aug 2015 06:33 PM
Last Updated : 09 Aug 2015 06:33 PM
ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதன் 70-வது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நாகசாகியில் உள்ள அமைதிப் பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அணுகுண்டு வீசப்பட்ட நேரமான காலை 11.02-க்கு மணி அடித்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இதில் சுமார் 1.4 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
அடுத்ததாக. கோகுரா நகரத்தின் மீது அணுகுண்டு வீச இலக்கு நிர்ணயிக்கபட்டது. ஆனால் அந்த நகரம் மேகம் சூழ்ந்து இருளடைந்து காணப்பட்டதால், நாகசாகி நகரின் மீது அதே ஆண்டில் ஆகஸ்ட் 9-ம் தேதி அணுகுண்டு வீசப்பட்டது. இதில் சுமார் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT