Last Updated : 11 Aug, 2015 04:51 PM

 

Published : 11 Aug 2015 04:51 PM
Last Updated : 11 Aug 2015 04:51 PM

சுருட்டிய மில்லியன் டாலர்கள் தொகையை திரும்பச் செலுத்த இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுஹர்தோ குடும்பத்துக்கு கோர்ட் அதிரடி

சுருட்டிய மில்லியன் டாலர்கள் தொகையை திரும்பச் செலுத்த இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுஹர்தோ குடும்பத்துக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுஹர்தோ தனது ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்து சுருட்டிய தொகைகளில் 324 மில்லியன் டாலர்களை மீண்டும் அரசு நிதியத்தில் சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரது குடும்பத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தோனேசியாவை சுஹர்தோ 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது இரும்புக்கர அடக்குமுறை ஆட்சி 1998-ம் ஆண்டு மக்கள் புரட்சி மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இவரது ஆட்சியில் அவரது குடும்பத்தினர் பெரிய அளவில் ஊழல்களில் ஈடுபட்டனர். குடும்பத்தினர் பெருமளவுக்கு பணத்தை சுருட்டினர், சொத்துக்களை குவித்தனர்.

இந்நிலையில் 324 மில்லியன் டாலர்கள் தொகையை மீண்டும் அரசு கருவூலத்தில் சுஹர்தோ குடும்பத்தினர் சேர்க்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருப்பது அந்த நாட்டில் முதன்முறையாகும்.

சுஹர்தோ குடும்பத்தினருக்கு தீர்ப்பின் படி செயல்பட பல நாட்கள் அவகாசம் வழங்கப்படும், அதற்குள் செலுத்தவில்லையெனில் மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்ற செய்தி தொடர்பாளர் சுஹாதி தெரிவித்துள்ளார்.

அறக்கட்டளை ஒன்றன் பெயரில் சுஹர்தோ குடும்பம் பெரிய அளவுக்கு நாட்டின் செல்வ, வள ஆதாரங்களைச் சுரண்டி, சொத்துகளை குவித்ததாக அட்டார்னி ஜெனரல் ஒருவர் தொடுத்த வழக்கின் மீதான தீர்ப்பே இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x