Published : 26 Dec 2019 07:09 AM
Last Updated : 26 Dec 2019 07:09 AM

என்ஆர்சி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் எதிர்ப்பு

வாஷிங்டன்

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க எம்.பி.க்கள் உடனான தனது சந்திப்பை ரத்து செய்தார்.

அமெரிக்க எம்.பி.க்கள் குழுவில்ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்தியவம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால், பிறகு சேர்க்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் (54) அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய – அமெரிக்க பெண் ஆவார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அமெரிக்க எம்.பி.க்கள் சிலரில் பிரமிளாவும் ஒருவர்.

இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் பிரமிளாஜெயபால் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க எம்.பி.க்களைசந்திக்கும் போது, இதில் யார், யார் பங்கேற்கலாம் என உத்தரவிட முயற்சிப்பது ஒரு வெளிநாட்டு அரசுக்கு முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை ஆகும்.

2017-ல் அமெரிக்க எம்.பி.க்களின் இந்திய பயணத்தின்போது, இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பினேன். எனது பயணத்துக்கு பிறகு இந்தியாவில் உள்ள நிலைமை துரதிருஷ்டவசமாக மேலும் மோசமாகிவிட்டது. இந்தியா முழுவதும் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு மாற்றமாக உள்ளது. புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் குடியுரிமை மற்றும்வாக்குரிமை பெறுவதை சிஏஏ மற்றும்என்ஆர்சி மூலம் தடுக்க முடியும். தேசவிரோதப் போக்கை அதிகரிக்கும் செய்திகளை ஒளிபரப்ப வேண்டாம் என செய்தி சேனல்களுக்கு ஆலோசனை அளிப்பது தொடர்பான நரேந்திர மோடி அரசின் முடிவு கவலை அளிக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x