Published : 13 Nov 2019 05:05 PM
Last Updated : 13 Nov 2019 05:05 PM
ஏமனுக்கு பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் நிலைதன்மை ஏற்பட அனைத்து முயற்சிகளையும் சவுதி தொடர்ந்து அளிக்கும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை சவுதி ஊடகத் துறை அமைச்சர் துர்கி அல் ஷபனா தெரிவித்துள்ளார்.
சவுதி வெளியிட்ட அறிக்கையில் “ஏமன் நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அந்நாட்டு குடிமக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவதற்கும் ஏமன் கட்சிகள் முயற்சிப்பதை நாங்கள் பாராட்டுக்கிறோம். மேலும் பிராந்தியத்தில் ஏமன் நிலைத்தன்மையை பெறவும், அந்நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்கவும் சவுதி தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் அரசுக்கும் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஏமனில் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு அரசியல் ரீதியாக முக்கியத் தீர்வாக இந்த ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஏமனில் புதிய சூழல் உருவாகும். சவுதி அரேபியா உங்களுடன் துணை நிற்கும் என்று இந்த ஒப்பந்தம் குறித்து சவுதி இளவரசர் முகமது சல்மான் தெரிவித்தார்.
ஏமனில் தென் பகுதி பிரிவினைவாதிகளுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment