Last Updated : 19 Aug, 2015 10:33 AM

 

Published : 19 Aug 2015 10:33 AM
Last Updated : 19 Aug 2015 10:33 AM

அமெரிக்காவின் ‘பேட்மேன்’ சாலை விபத்தில் பலி

அமெரிக்காவில் 'பேட்மேனாக' வலம் வந்தவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் வசித்து வந்தவர் லென்னி ராபின்சன் (51). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் அங்கு வீடுகளைச் சுத்தப்படும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு, 'பேட்மேன்' கதாபாத்திரத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தக் கதாபாத்திரம் அணிவது போன்ற உடை மற்றும் 'பேட்மேன்' கார் வாங்கினார்.

ஓய்வு நேரங்களில் அந்த உடைகளை அணிந்து கொண்டு, அந்த காரில், அருகில் இருக்கும் மருத்துவமனை களுக்குச் செல்வார். அங்கு நோயி னால் பாதிக்கப்பட்ட குழந்தைக ளைச் சந்தித்து, அவர்களை சிரிக்க வைத்து, அன்பளிப்புகள் கொடுத்து, மகிழ்வூட்டி, ஆறுதல் அளித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிறு இரவு தனது 'பேட்மேன்' காரை நெடுஞ்சாலை ஒன்றில் ஓட்டிச் சென்றார். ஓரிடத்தில் அந்த கார் பழுதானது. உடனே அவர் காரில் இருந்து இறங்கி, இன்ஜினை பழுது பார்க்கத் தொடங்கினார்.

அப்போது, அந்த காருக்குப் பின்னால் வந்த மற்றொரு வாகனம் மோதியது. இதில் ராபின்சன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறப்பு குறித்து அவரின் சகோதரர் ஸ்காட் கூறும்போது, "அவர் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். பல குழந்தைகளை சிரிக்க வைத்தார். அவர் எப்போதும் செய்ய விரும்பியது அது ஒன்றைத் தான்" என்றார்.

லென்னி ராபின்சனையும் அவரது காரையும் போலீஸார் 2012ம் ஆண்டு மடக்கினர். அப்போது ரகசிய கேமராவில் பதிவான வீடியோ, இணையதளத்தில் பகிரப்பட்டது. அதன் காரணமாக, ராபின்சன் பிரபலமானார்.

ஒருமுறை இவரிடம் 'உங்களை (பேட்மேன்) ஏன் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது?' என்று கேட்டதற்கு, 'எந்த ஒரு விசேஷ சக்திகளும் இல்லாத ஒரே சூப்பர் ஹூரோ, பேட்மேன் மட்டும்தான். அவர் இயற்கையாகவே சூப்பர் ஹூரோதான். அதனால் குழந்தைகளுக்கு அவரை மிகவும் பிடித்துப் போகிறது' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x