Published : 28 Jul 2015 11:05 AM
Last Updated : 28 Jul 2015 11:05 AM
சோமாலியா நாட்டின் தலைநகரான மோகாதிஷுவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் 'ஷெபாப்' தீவிரவாத இயக்கத்தினரால் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி அகமது அலி கூறும்போது, "இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே பொதுமக்கள் ஆவர். சிலர் நேற்று முன் தின இரவே காயங்கள் காரணமாக பலியாயினர். சிலரின் உடல்களை கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன" என்றார்.
முன்னதாக, இந்தத் தாக்கு தலில் 6 பேர் உயிரிழந்த தாகக் கூறப்பட்டது. காயம டைந்த மேலும் பலர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT