Published : 15 Jul 2015 12:29 PM
Last Updated : 15 Jul 2015 12:29 PM
சூரியக் குடும்பத்தின் சுற்று வட்டப் பாதையில் கடைசி கிரகமான புளூட்டோ நாசா உருவாக்கிய நியூ ஹாரிசான்ஸ் (New Horizons) விண்கலம் வெற்றிகரமாக நெருங்கியது.
புளூட்டோ கிரகத்தை பற்றிய ஆராய்ச்சிக்காக நியூ ஹாரிசான்ஸ் விண்கலத்தை கடந்த 2006-ம் ஆண்டு நாசா விண்ணில் ஏவியது. கடந்த 9.5 ஆண்டு காலத்தில் மணிக்கு 31 ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து இறுதியாக புளூட்டோ கிரகத்தை ஹாரிசான்ஸ் விண்கலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நெருங்கியது.
சூரியக் குடும்பத்தின் கோள்களில் இதுவரை எந்த விண்கலமும் போய்ச் சேராத நிலையில் விண்வெளி விஞ்ஞான ஆய்வு பயணத்தில் மனிதர்கள் நிகழ்த்தியுள்ள பெரும் சாதனை இது.
இந்த்ப் பயணத்தில் புளூட்டோவின் பல புகைப்படங்களை நாசாவுக்கு ஹாரிசான் அனுப்பி வருகிறது.
'மனித வரலாற்றில் மிகப் பெரிய வெற்றித் தருணம் இது' என நாசா அறிவியல் ஆய்வக குழுவின் தலைவர் ஜான் க்ரன்ஸ்ஃபெல்ட் தெரிவித்தார்.
புளூட்டோவின் சுற்றளவை சரியாக அளவிடுவது இதுவரை பெரிய சவாலாக இருந்த நிலையில், நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றளவு 2,370 கிமீ என்று கண்டறிந்து தகவல் அனுப்பியுள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் புளூட்டோ கிரகம் குறித்த தகவல்கள் பூமிக்கு வந்து சேரும். அதற்காக மகிழ்ச்சியுடன் நாசா விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். வெற்றிகரமான இந்தத் தருணத்தில் விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT