Published : 19 Jul 2015 12:04 PM
Last Updated : 19 Jul 2015 12:04 PM
புளுட்டோ கிரகத்தை ஆய்வு செய்து வரும் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் அனுப்பி உள்ள புதிய புகைப்படத்தில், சமவெளியில் பலகோண வடிவ பதிவுகள் மற்றும் மிருதுவான மலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் புளுட்டோவில் புவியியல் ரீதியான செயல்பாடுகள் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள் ளனர்.
சமவெளியின் ஒரு பிரிவு 19 முதல் 32 கி.மீ. அளவில் பலகோண வடிவத்தில் உடைந்துள்ளது. அதில் ஆழமில்லாத தொட்டிகள் போன்ற தோற்றம் காணப்படுகிறது. அதில் சிலவற்றில் அடர்த்தியான பொருளால் கோடு போட்டதுபோல் உள்ளன. சிறுசிறு மிருதுவான மலைகளும் உள்ளன.
அமெரிக்காவின் நாசா, புளுட்டோ கிரகத்தின் தரைப்பரப்பு மற்றும் அதன் முதன்மை சந்திர னான சரோன் ஆகியவற்றை ஆராய்வதற்காக ரூ.4,500 கோடி செலவில் நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தை அனுப்பி உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு அனுப்பப் பட்ட இந்த விண்கலம் 488 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள புளுட்டோ கிரகத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றடைந்தது. 50 ஜிகாபைட் தகவல்களை சேகரிக் கும் திறன்கொண்ட இது இதுவரை 1 சதவீத தகவல்களை சேகரித் துள்ளது. புளுட்டோவின் தட்பவெப்ப நிலை மைனஸ் 240 டிகிரி செல்சியஸாக இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT