Published : 18 Jul 2015 10:35 AM
Last Updated : 18 Jul 2015 10:35 AM
ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒரே வழி என்று அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மிக நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் சமரச முயற்சியால் இருதரப்பு பிரதிநிதிகள் அண்மையில் இஸ்லாமாபாதில் சந்தித்துப் பேசினர்.
இரண்டாம் கட்ட பேச்சு
இதைத் தொடர்ந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி காபூலில் நேற்று கூறியதாவது:
சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்களுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 15 நாட்களுக்குள் நடைபெறும்.
இதில் தலிபான்களின் கோரிக்கை கள், பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அவற்றுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்.
ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதுதான் ஒரே தீர்வு. நாட்டு மக்களும் அமைதியை மட்டுமே விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலிபான்களின் தலைவர் முல்லா ஓமரும் அமைதிப் பேச்சு வார்த்தையை ஆதரித்துள்ளார். மேலும் தலிபான்களின் தரப்பில் புதிதாக அரசியல் அலுவல கத்தை திறக்கவும் அவர் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய அச்சுறுத்தல்
ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வரும் சூழ் நிலையில் அந்த நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மெதுவாக கால் ஊன்றி உள்ளது.
சிரியா, இராக்கில் ஆதிக்கம் செலுத்தும் அந்த அமைப்பில் ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் அதிக அளவில் இணைக்கின்றனர். இதற்கு தலிபான்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் சில பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பு முளைவிட்டு வளரத் தொடங்கியுள்ளது. அந்தப் பகுதிகளில் தலிபான்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடைபெற்று வருகிறது.
மசூதியில் குண்டுவெடிப்பு
இதனிடையே ரமலான் பண்டிகையை முன்னிட்டு பால்க் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அப்போது மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT