Published : 06 Jul 2015 03:24 PM
Last Updated : 06 Jul 2015 03:24 PM
ஐரோப்பிய யூனியனின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டாம் என்று கிரீஸ் மக்கள் வாக்களித்த நிலையில், அந்நாட்டு நிதியமைச்சர் யனிஸ் வரோஃபகிஸ் ரஜினாமா செய்தார்.
சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஐரோப்பிய கூட்டமைப்பு விதித்த நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என்று கிரீஸ் மக்கள் வாக்களித்த விவரம் வெளியானதை தொடர்ந்து அந்நாட்டுக்கான நிதியமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ட்விட்டரில் அறிவித்தார்.
கடன் தொகையை திருப்பி செலுத்த ஐரோப்பிய யூனியனிடம் 2 வருட கூடுதல் அவகாசத்தையும் கூடுதல் கடன் தொகையையும் கிரீஸ் கேட்டு வந்தது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் கிரீஸ் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதனை குறிப்பிட்ட வரோஃபகிஸ், "இனி நான் ஐரோப்பிய கூட்டமைப்பு குழுவில் இடம்பெற போவதில்லை" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT