Published : 23 Sep 2019 09:48 PM
Last Updated : 23 Sep 2019 09:48 PM
ஐ.நா., பிடிஐ
பருவநிலை மாற்ற விளைவுகளைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் சேர்ந்து ஒருமித்த கொள்கையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி மரபுசாரா எரிசக்தியை இந்தியா பயன்படுத்த துவங்கி விட்டது. சூரிய ஒளி எரிசக்தியை ஊக்குவித்து வருகிறோம் என்றார்.
பிரதமர் பேசியதாவது:
பருவ நிலை மாற்றத்தை வெல்ல நம் இடையே ஒரு விரிவான ஒருமித்த கொள்கை தேவைப்படுகிறது. இந்த உலகம் இதற்கென கடுமையாக உழைத்து வருகிறது. பருவ நிலை மாற்றத்தை வெல்ல 80 நாடுகள் இணைந்து போராடி வருகிறது. தேவை என்பது பேராசை அல்ல, இதுவே நமது கொள்கை. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை இந்தியா துவக்கி விட்டது. மரபுசாரா எரிசக்தியை இந்தியா பயன்படுத்த துவங்கி விட்டது.
நீரை சேமிப்பது, நீர் வளத்தை பெருக்குவதற்கென ஜல்சக்தி திட்டத்தை இந்தியா முன்னெடுத்து செல்கிறது. வரும் காலங்களில் நீர்வளத்துறைக்கு 50 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்க உள்ளோம். இந்தியா எலக்ட்ரானிக் வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு புகை இல்லா சமையல் காஸ் வழங்கி உள்ளோம்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 175 ஜிகா வாட் 2022 -ல் பெறுவோம். இது மேலும் 450 ஜிகா வாட்டாக பெருக்குவோம். பேசியது போதும். உலகம் இப்போது செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இவ்வாறு மோடி பேசினார்.
முக்கிய அம்சங்கள்:
பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சந்திக்க உலக நாடுகள் போதியனவற்றைச் செய்வதில்லை.
நடத்தை மாற்றம் ஏற்பட உலக மக்கள் இயக்கம் தேவை
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா 50 பில்லியன் டாலர்களை நீராதார சேமிப்புக்காகப் பயன்படுத்தும்
மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இலக்கை 400 கிகாவாட்களாக அதிகரிப்போம்
1 மில்லியன் டாலர்கள் செலவில் ஐநா கூரை மீது சூரியஒளி மின்சக்தி பேனல்கள் அமைப்பதை செவ்வாயன்று இந்தியா தொடங்கி வைக்கிறது.
இந்தியா ஏற்படுத்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கூட்டணியில் 80 நாடுகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT