Last Updated : 24 Jul, 2015 10:23 AM

 

Published : 24 Jul 2015 10:23 AM
Last Updated : 24 Jul 2015 10:23 AM

மாலத்தீவில் வெளிநாட்டினர் நிலம் வாங்க அனுமதி

மாலத்தீவில் வெளிநாட்டினர் நிலம் வாங்க சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவில் வெளி நாட்டினர் நிலம் வாங்க தடை விதிக் கப்பட்டிருந்தது. அங்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையிலேயே நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில் சட்டவிதிகளை தளர்த்த ஆளும் மாலத்தீவு முன் னேற்ற கட்சி அரசு முடிவு செய்தது. இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முயற்சி மேற்கொண்டது.

அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 85. இதில் சட்ட திருத்தம் மேற் கொள்ள 64 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் கட்சிக்கு 48 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 70 உறுப்பினர்கள் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 14 பேர் மட்டுமே எதிர்த்தனர்.

புதிய சட்டத் திருத்தத்தின்படி ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் மாலத்தீவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அந்த நாட்டில் சொந்தமாக நிலங்கள் வாங்கலாம்.

அண்மைகாலமாக மாலத்தீவில் சீனா அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. அந்த நாட்டு அரசுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறது. புதிய சட்டதிருத்த மசோதா சீனாவுக்கு ஆதரவாக இருப்பதால் இந்திய தரப்பு கவலை தெரிவித்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x