Published : 05 Sep 2019 05:49 PM
Last Updated : 05 Sep 2019 05:49 PM
விளாதிவோஸ்டக்
ரஷ்யாவின் தூரக்கிழக்கு வளர்ச்சிக்காக 100 கோடி டாலர்கள் கடனுதவி வழங்கப்படும் என கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.
கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றுள்ளார்.
இதில் புதன்கிழமை இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் வழித்தொடர்பு, எரிசக்தி, இயற்கை எரிவாயு, பெட்ரோல், தகவல் தொடர்பு, கலாச்சாரம் உள்ளிட்ட 15 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி வியாழக்கிழமை ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை இன்று (வியாழக்கிழமை) ரஷ்யாவின் விளாதிவோஸ்டக்வில் சந்தித்தார்.
மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதுவையும் சந்தித்து பேசினார்.பின்னர் இன்று மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘கிழக்கு பொருளாதார மாநாடு என்பது தூர கிழக்கு பிராந்தியத்தில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது.
இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வெகுவாக பாராட்டுகிறேன். அவரின் இந்த முயற்சிக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். தூர கிழக்கின் வளர்ச்சியை மையப்படுத்தி 100 கோடி கடனுதவி அளிக்கப்படும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT