Last Updated : 22 Jul, 2015 02:15 PM

 

Published : 22 Jul 2015 02:15 PM
Last Updated : 22 Jul 2015 02:15 PM

மாற்றின்ப தளத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் அம்பல மிரட்டல்

பல கோடி உறுப்பினர்கள் கொண்ட ஆஷ்லே மேடிசன் என்ற மாற்றின்ப வலைதளம் (டேட்டிங் வலைதளம்) உள்ளே புகுந்து ஊடுருவிய ஹேக்கர்கள், தாங்கள் கைப்பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தப் போவதாக அதன் வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

திருமண உறவுக்கு அப்பால் அல்லது மாற்று உறவை ஏற்படுத்த முயல்போருக்கு பல டேட்டிங் இணையதளங்கள் உலா வருகின்றன. அப்படிப்பட்ட நிறுவனம் தான் ஆஷ்லே மேடிசன்.காம்.

அமெரிக்காவின் கனடா மாகாணத்திலிருந்து இயங்கும் இந்த இணையதள நிறுவனம் இந்தத் துறையில் நீண்ட ஆண்டுகளாக நீடித்து இயங்கி வருகிறது. பல கோடி உறுப்பினர்கள் உள்ள இந்த இணையதளம் 'டேட்டிங்' பிரிவில் உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது.

இந்த இணையதளத்தில் ஊடுருவி டேட்டாக்களை திருடியுள்ள அடையாளம் அறியப்படாத ஹேக்கர்கள், டேட்டிங் இணையதளத்தை உடனடியாக மூடாவிட்டால், உறுப்பினர்களின் உண்மையான விவரங்கள் மற்றும் அவர்களது நிர்வாணப் படங்களை வெளியிட உள்ளதாக பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ஊடுருவல் நடந்த நிலையில், இணையதளம் தற்போது வழக்கமான சேவையை தொடங்கியுள்ளது.

இணையதளத்தில் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் அவர்களது உண்மையான விவரங்களை குறிப்பிடத் தேவையில்லை என்று ஆஷ்லே மேடிசனின் விதிமுறைகளில் உள்ளது. ஆனால், உறுப்பினர்களின் கிரெடிட் கார்ட் பயன்பாட்டின் வழியே டேட்டாக்களை பெற்று அவர்களது முழு விவரங்களை கைப்பற்றி இருப்பதாக ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஷ்லே மேடிசன் இணையதளத்தின் தாய் கழக நிறுவனமான ஆவிட் லைஃப் மீடியாவின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "இணையதளத்துக்குள் சிலர் புகுந்து ஹேக் செய்துவிட்டனர். லட்சக்கணக்கான டேட்டாக்கள் திருடப்பட்டு விட்டது. இணையதளத்தின் நிதி ஆவணங்களிலும் கைவரிசை காட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து உடனடியாக மதிப்பீடு செய்ய முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.

ஊடுருவலில் ஈடுபட்ட ஹேக்கர்களின் விவரத்தை பெற அமெரிக்க சட்ட அமலாக்க முகமையை ஆவிட் லைஃப் மீடியா நாடியுள்ளது. ஹேக்கர்களின் மிரட்டலுக்கு பணிந்து இணையதளம் மூடப்படுமா? என்பது குறித்து அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x