Last Updated : 15 Jul, 2015 10:36 AM

 

Published : 15 Jul 2015 10:36 AM
Last Updated : 15 Jul 2015 10:36 AM

அணுகுண்டுகளை தயாரிக்க மாட்டோமென்று வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம்: ‘மிகப்பெரிய தவறு’ என இஸ்ரேல் கண்டனம்

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் ஈரான் இடையே அணு ஆயுத தடை தொடர்பான ஒப்பந்தம் நேற்று உடன்பாடு எட்டப்பட்டது.

இதன்படி, அணுகுண்டுகளை தயாரிப்பதில்லை என ஈரானும், அதன் மீதான பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப் படும் என வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. எனினும் இந்த உடன்பாட்டை `வரலாற்றில் இடம்பெறக்கூடிய மிகப்பெரிய தவறு’ என்று ஈரானின் பரம எதிரி யான இஸ்ரேல் வர்ணித்துள்ளது.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடு களுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 18 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த் தையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு ஏற்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்த ஒரு அதிகாரி இதுகுறித்து கூறும்போது, “இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட் டுள்ளது” என்றார். அடுத்தகட்ட மாக இந்த ஒப்பந்தத்தை செயல் படுத்துவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஈரான் அதிகாரி ஒருவர் கூறும் போது, “நீண்டகாலமாக இழு பறியாக இருந்துவந்த விவகாரம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது” என்றார்.

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் கூறும் போது, “ஈரான் அணு ஆயுதங் களை தயாரிப்பதாக சந்தேகம் எழுந்தால் அதுகுறித்து விசாரணை நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் அந்த நாட்டுடன் ஏற்படுத்தப் பட்டுள்ளது” என்றார்.

சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தலைவர் யூகியா அமனோ கூறும்போது, “ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப் பின் ஆய்வு தொடர்பான அறிக்கை டிசம்பர் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும்” என்றார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்வதற்கு வகை செய்கிறது. மேலும் ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்வ தாக சந்தேகம் எழுந்தால் அது தொடர்பாக ஐ.நா. சோதனை நடத்தவும் இதில் வகை செய் யப்பட்டுள்ளது.

இதுபோல ஈரான் மீது விதிக் கப்பட்டுள்ள பொருளாதார தடை கள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகளை மேற் கத்திய நாடுகள் விலக்கிக் கொள் ளும். இதன்மூலம் 7.8 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரானின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஈரான் அதை மறுத்து வந்தது. மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காகவே அணு சக்தி திட்டங்களை நிறைவேற்றி வருவதாக அந்த நாடு கூறியது. ஆனால் இதை ஏற்க மறுத்த அமெரிக்காவும், மேற்கத்திய நாடு களும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்தது.

ஈரானின் அணுசக்தி திட்டங் களை கட்டுப்படுத்துவது தொடர் பாக நீண்ட காலமாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இந் நிலையில் கடந்த 2013-ல் ஹசன் ரூஹானி ஈரானின் புதிய அதிபரா னார். இவரது வருகைக்குப் பிறகு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடைசியாக சுவிட்சர் லாந்தின் லுசானே நகரில் ஈரானு டன் வல்லரசு நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் தற் காலிக உடன்பாடு எட்டப்பட்டது.

பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடு 2 தடவை நீட்டிக்கப்பட்ட போதும் உடன்பாடு ஏற்படவில்லை. இதை யடுத்து, 2015 ஜூன் 30-ம் தேதிக் குள் இறுதி உடன்பாட்டை செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்யப் பட்டது.

காலக்கெடு முடிய இருந்த நிலையில் வியன்னா நகரில் கடந்த மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் காலக் கெடு முடிவதற்கு முன்பாக உடன் பாடு எட்டப்படவில்லை. எனினும் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு தரப்பினருக் கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நேற்று ஒப்பந்தம் இறுதி வடிவத்தை அடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x