Published : 01 Aug 2019 01:05 PM
Last Updated : 01 Aug 2019 01:05 PM
சைபீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து ட்ரம்ப்பும், புதினும் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியான சைபீரியாவில் சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவுக் கொண்ட காடுகள் காட்டுத் தீக்கு இரையாகி உள்ளன என்று ரஷ்ய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இந்தக் காட்டுத் தீ காரணமாக சைபிரியாவின் மேற்குப் பகுதி நகரங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு விமான பயணமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
சைபீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க ரஷ்யா, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் உதவி கேட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ட்ரம்பும் , புதினும் சைபீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அலுவலகம் தரப்பில், “ சைபீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ குறித்து தனது வருத்தத்தை அதிபர் வெளிப்படுத்தினார். அத்துடன் இரு நாட்டு வணிகம் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் உரையாடினர்” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT