Published : 08 Jul 2015 10:23 AM
Last Updated : 08 Jul 2015 10:23 AM
உலகில் மிகவும் வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த ஜப்பானை சேர்ந்த சகாரி மோமாய் (112) காலமானார்.
சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமானது.
வயது அதிகம் ஆகிவிட்ட தால் அவரது உடல் முழுமையாக சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இந்நிலை யில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உயிர் பிரிந்தது.
1903-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி மோமாய் பிறந்தார். கடந்த ஆண்டுதான் உலகின் மிகவய தான மனிதர் என்ற கின்னஸ் சாத னையை படைத்தார். அப்போது, “இந்த உலகத்தைவிட்டு போக இப்போது ஆசைப்படவில்லை.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்தார். எனினும் அவரது ஆசை நிறைவேற வில்லை. ஜப்பானின் புகுஷிமா பகுதியில் பிறந்த மோமாய், பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT