Last Updated : 21 Jul, 2015 01:04 PM

 

Published : 21 Jul 2015 01:04 PM
Last Updated : 21 Jul 2015 01:04 PM

காண்டாமிருகம் கொம்புக்குள் ஸ்பை கேமரா: வேட்டையை தடுக்க தென்னாப்பிரிக்கா புதிய வியூகம்

காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக அதன் கொம்புக்குள் உளவு கேமராவை பொருத்த தென் ஆப்பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ஜி.பி.எஸ். கண்காணிப்புடனான பிரத்யேக அவசர ஒலி எழுப்பும் கூடுதல் வசதி கொண்ட உளவு கேமராவை பிரிட்டன் நாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

வேட்டையாடப்படுவதால் அழிந்து வரும் விலங்கினங்கள் குறித்து கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் செஸ்டர் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்புக்காக வேட்டையாடபடுவதாக தெரிவித்துள்ளது.

அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த வகை மிருகத்தை காக்கும் வகையில் ஸ்பை கேமராவை அதன் கொம்புக்குள் பொருத்த தென்ஆப்பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

செயற்கைகோள் மூலம் இந்த உளவு கேமரா காண்டாமிருகத்தின் இதயத் துடிப்பை கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்படும் என்று தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது. இவற்றின் உதவியினால் வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க முடியும் என்று அந்த ஆராய்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x