Published : 29 Jul 2015 08:18 AM
Last Updated : 29 Jul 2015 08:18 AM
போர் குற்றங்களுக்காக, லிபியா முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாமுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
லிபியாவை 1969 முதல் ஆட்சி செய்த கடாபி, கடந்த 2011-ல் நடந்த உள்நாட்டுப் புரட்சியில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்களை ஒடுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், உள்ளிட்ட 9 பேருக்கு லிபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT