Published : 25 Jul 2015 10:36 AM
Last Updated : 25 Jul 2015 10:36 AM
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் அல்காய்தா மூத்த தளபதி உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
கடந்த 11-ம் தேதி பக்டிகா மாகாணத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதில், அபு கலீல் அல் சுதானி எனும் அல்காய்தா மூத்த தளபதி கொல்லப்பட்டார். இவர், தற்கொலை மற்றும் வெடிகுண்டு தாக்குல் பிரிவுகளுக்கு பொறுப்பு வகித்து வந்தார். இத்தாக்குதலில் மேலும் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்ட கன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘மிக முக்கியமான தீவிர வாதிகளில் ஒருவரான அல் சுதானி கொல்லப்பட்டது, உலகம் முழுக்க அல்காய்தாவின் நட வடிக்கைகளுக்கு பின்னடவை ஏற்படுத்தும்.
ஆப்கன் பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் பயங்கர வாதிகளுக்கு எதிரான அமெரிக் காவின் போர் தொடரும்’ என தெரி விக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT