Published : 13 Jul 2015 04:15 PM
Last Updated : 13 Jul 2015 04:15 PM
ரஷ்யாவில் ராணுவத்துக்கு சொந்தமான முகாம் கட்டிடத்தின் பாகம் இடிந்து விழுந்ததில் 23 பேர் பலியானதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு ராணுவ அமைச்சக செய்தி குறிப்பில் கூறும்போது, "தெற்கு மத்திய ரஷ்யாவின் ஸ்வெட்லீ கிராமத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் தங்கும் கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை நிலவரப்படி 23 ஆக அதிகரித்துள்ளது" என்றார்.
மீட்கப்பட்ட பலர் மஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிந்தது விழுந்த விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT