Published : 13 Jul 2015 02:53 PM
Last Updated : 13 Jul 2015 02:53 PM
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள வணிக மையத்தை கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். பல மணிநேர ஆயுத போராட்டத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளாக இருந்த 18 பேர் மீட்கப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள வணிக மையத்தை கொள்ளையர்கள் காலை 6 மணி அளவில் சிறைபிடித்தனர். பாரீஸ் நகரின் ஹைவுத் தே சியேனில் உள்ள வில்லேனுவே ல கார்னே என்ற பகுதி 'ப்ரைம் மார்க்' வணிக மையத்துக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் பொதுமக்கள், ஊழியர்கள் என பலரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக வணிக மையத்தை சுற்றிலும் சிறப்பு ஆயுதப் படை வரவழைக்கப்பட்டு, சாலைகளில் முற்றிலுமாக போக்குவரத்து மூடப்பட்டது. பல மணி நேர சண்டைக்கு பின்னர் உள்ளிருந்து 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அங்காடியை கொள்ளையடிக்கும் நோக்கில், இந்த செயலில் அந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று பாரீஸ் போலீஸார் முதற்கட்டமாக தெரிவித்தனர். ஆனால், பிணைக் கைதிகள் மீட்கப்பட்ட பின்னர், மர்ம நபர்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பாரீஸில் சார்லி ஹெப்டோ மற்றும் கோஷர் வணிக வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கை உச்சகட்டத்தில் உள்ளது. பயங்கரவாத தாக்குதல் ஏற்படக் கூடும் என்ற உளவுத் துறை எச்சரிக்கையும் பாரிஸுக்கு அவ்வப்போது விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT