Last Updated : 02 Jul, 2015 12:08 PM

 

Published : 02 Jul 2015 12:08 PM
Last Updated : 02 Jul 2015 12:08 PM

பிரபல கார் நிறுவனத்தில் பரபரப்பு: ஊழியரை கொன்ற ரோபோ

ஜெர்மனியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியரை, அங்கிருந்த ரோபோ நசுக்கி கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனின் ஃப்ராங்ஃப்ரூட்டில் உள்ளது ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவத்தின் தலைமை உற்பத்தி ஆலை. இதில் பணியாற்றி வந்த 22 வயதுமிக்க ஊழியரை அங்கு பணியில் இருந்த ரோபோ திடீரென இழுத்து பெரிய தகடு மீது தள்ளி நசுக்கியே கொன்றதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹில்விக் கூறினார்.

ரோபோவின் செயல்பாடுகள் திடீரென மாறுவதற்கு அதற்கு அளிக்கப்பட்ட தவறான வழிமுறை குறிப்புகளே காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது அந்த ஊழியருடன் மற்றொரு ஊழியரும் இருந்ததாகவும், அவருக்கு ரோபாவால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் ஹில்விக் கூறினார்.

ஆனால் சம்பவம் குறித்து நிறுவனத்தின் சார்பில் சரியான தகவல் தர மறுத்து வருகின்றனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் ரோபோ, கார் உதிரி பாகங்களை இணைத்து கையாளும் பணிக்காக தயாரிக்கப்பட்டதாகும்.

இது குறித்து யார் யார் மீதி வழக்கு பதிவது என்று ஜெர்மன் அரசு தரப்பு சட்ட நிபுணர்கள் ஆலோசித்து வருவதாக டிபிஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x