Published : 01 Jul 2015 12:48 PM
Last Updated : 01 Jul 2015 12:48 PM
ஏமனில் அல்-காய்தா இயக்கத்தினரால் சிறை தகர்க்கப்பட்டது. இதில் இந்த இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உட்பட சுமார் 1200 கைதிகள் தப்பி ஓடியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஏமனின் நகரான தாய்ஸில் உள்ள சிறையில் நேற்று கைதிகள் மத்தியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து அல்-காய்தா பயங்கரவாதிகள் அதிரடியாக புகுந்து சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
சிறை தகர்ப்பில் அல்-காய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள், சந்தேக குற்றவாளிகள் என சுமார் 1200 கைதிகள் தப்பி ஓடினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் அவ்வப்போது சிறை தகர்ப்பு நடந்தாலும், ஆயிரத்துக்கும் மேலான கைதிகள் தப்பியோடியது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தச் சதியின் பின்னணி தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக ஏமனின் தென்கிழக்கே உள்ள முக்கிய சிறையை அல்- காய்தா இயக்கத்தினர் திட்டமிட்டு தகர்த்து அங்கிருந்த அதன் முக்கிய பயங்கரவாத தலைவர் உட்பட சுமார் 300 கைதிகளை தப்பிக்கச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT