Last Updated : 21 Jul, 2015 10:18 AM

 

Published : 21 Jul 2015 10:18 AM
Last Updated : 21 Jul 2015 10:18 AM

அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஆப்கன் ராணுவ வீரர்கள் 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடி மீது அமெரிக்கா மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

லோகார் மாகாணம், பராக்கி பராக் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது நேற்று காலை 6 மணியளவில் 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் குண்டுகளை வீசின. இதில் சோதனைச் சாவடி தீப்பற்றி எரிந்ததுடன் 14 ராணுவ வீரர்கள் இறந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் களுக்கு எதிரான போரை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறுத்திக் கொண்டன. இப்பணி ஆப்கானிஸ் தான் ராணுவம் வசமே ஒப்படைக் கப்பட்டது. என்றாலும் ராணுவத் துக்கு பயிற்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகாக சிறிய அளவில் அங்கு நேட்டோ படைகள் தங்கியுள்ளன.

இந்நிலையில் ஆப்கன் ராணுவம் மீதே நேட்டோ படைகள் தவறுதலாக தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடந்து வருகின்றன.கூட்டணிப் படையின் இத்தகைய தாக்குதலுக்கு இது சமீபத்திய உதாரணம் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x