Last Updated : 18 Jul, 2015 02:31 PM

 

Published : 18 Jul 2015 02:31 PM
Last Updated : 18 Jul 2015 02:31 PM

5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பிளாட்டினம் கொண்ட விண்கல் பூமியைக் கடக்கிறது

ஞாயிறன்று லண்டன் நேரம் இரவு 11 மணியளவில் பெரிய விண்கல் ஒன்று பூமியைக் கடந்து செல்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் திங்கள் அதிகாலை 4 மணியளவில் இண்டெர்நெட்டில் இதனை நேரலையாகக் காணலாம்.

UW-158 என்ற 90 மில்லியன் டன்கள் எடை கொண்ட இந்த விண்கல்லில் 5 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பிளாட்டினம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வடமேற்கு ஆப்பிரிக்க எரிமலைகளை உடைய தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த கேனரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலிருந்து இணையதளங்களை டெலெஸ்கோப்புடன் இணைக்கும் ஸ்லூ என்ற திட்டம் மூலம் இதன் படங்கள் ஒளிபரப்பப்படும்.

இது குறித்து ஸ்லூ வானியலாளர் பாப் பெர்மன் கூறும் போது, “விண்கல் நம் பூமியைக் கடப்பதை பார்ப்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவம்தான். இந்த UW-158 விண்கல் கடக்கும் போது ஸ்லூ அதனை நம்மை விட 30 மடங்கு அருகிலிருந்து பார்க்கும்.

இந்த விண்கல்லைப் பொறுத்தவரை மிகவும் வழக்கத்துக்கு மாறான விஷயம் என்னவெனில் இதில் நிறைய விலைமதிப்பில்லா பிளாட்டினம் அடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவேளை இந்தப் பிளாட்டினம் ஒருநாள் வெட்டி எடுக்கப்படலாம், அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x