Published : 08 Jul 2015 10:25 AM
Last Updated : 08 Jul 2015 10:25 AM
ஜப்பானில் பலத்த எதிர்ப்புகளுக் கிடையில் `கியூஷு எலக்ட்ரிக் பவர்' நிறுவனத்துக்குச் சொந்தமான செண்டாய் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி நேற்று முதல் தொடங்கப்பட் டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பரி சோதனைகளுக்குப் பிறகு அரசு இந்த அணு உலையைச் செயல் படுத்துவதற்கு அனுமதி தந்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த அணு உலையில் எரி பொருள் நிரப்பப்பட்ட பிறகு மீண்டும் ஒரு முறை பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் அணு உலை இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தகவலை அறிந்தவுடன், அந்த அணு உலைக்கு முன்பு சுமார் 120 அணு உலை எதிர்ப்பா ளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புகுஷிமா விபத்துக்குப் பிறகு மூடப்பட்ட அணு உலைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தீவிரம் காட்டி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT