Published : 10 Jul 2015 11:51 AM
Last Updated : 10 Jul 2015 11:51 AM
வங்கதேசத்தில் நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக குவிந்த மக்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெருக்கடியில் சிக்கி 23 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் ரம்ஜானை முன்னிட்டு வறுமையில் வாடும் மக்களுக்கு பணக்காரர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். அப்போது மக்களுக்குள் பொருட்களை பெறுவதில் மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிப்பட்டுக் கொண்டதில் 23 பேர் பலியானதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூட்டம் பெரிய அளவில் இருந்ததால் போலீஸாரால் நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT