Last Updated : 10 Jun, 2015 11:05 AM

 

Published : 10 Jun 2015 11:05 AM
Last Updated : 10 Jun 2015 11:05 AM

செவ்வாயில் கண்ணாடி படிமங்கள்: உயிர் இருந்ததற்கான ஆதாரம் என ஆய்வில் புதிய தகவல்

செவ்வாய் கிரகத்தில் உள்ள குகைகளில் கண்ணாடி படிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அங்கு பல ஆண்டு களுக்கு முன்பு உயிர்கள் இருந்திருக்கலாம் என்பதற்கு மேலும் ஓர் ஆதாரம் கிடைத் துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் `மார்ஸ் ரெகொனெஸ் ஸன்ஸ் ஆர்பிடர்' எனும் விண் கலம் அளித்த தகவல்களை அடிப் படையாகக் கொண்டு பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர் களின் ஆய்வில்தான் மேற்கண்ட தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர்களில் ஒருவரான கெவின் கேனான் கூறியதாவது:

மிகப் பெரிய விண்கற்கள், செவ்வாயின் மீது மோதியிருக்க லாம். அப்போது அங்கிருந்த சில பாறைகள் உருக ஆரம்பித்திருக் கலாம். உருகிய பாறைகள் மிக விரைவாக குளிர்ந்து அவை கண்ணாடித் துண்டுகளாக மாறியிருக்கலாம். இவற்றை `இம்பாக்ட் கிளாஸ்' என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

இந்த கண்ணாடித் துண்டுகளில் உயிர் வாழ்வதற்குத் தேவையான சில காரணிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. செவ்வாயில் உயிர்கள் இருந் திருந்தால் அவற்றின் தடயங்கள் இந்த கண்ணாடித் துண்டுகளில் நிச்சயம் பதிவாகியிருக்கும்.

அந்த கண்ணாடித் துண்டு களை இன்னும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு முடிவுக ள் `ஜியாலஜி' எனும் அறிவியல் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x