Published : 29 Jun 2015 11:59 AM
Last Updated : 29 Jun 2015 11:59 AM
துருக்கியில் ஆயிரக்கணக்கான தன்பாலின உறவாளர்கள் பெருமிதப் பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
துருக்கியின் ஸ்டிக்லால் தெரு, இஸ்தான்புல்லின் மிகப் பெரிய வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். தன்பாலின உறவாளர்களின் திருமணத்தை அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அங்கீகாரம் அளிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை முன்னிட்டு அதனை வரவேற்கும் வகையில் ஸ்டிக்லால் தெருவில் வானவில் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்ட கொடிகளுடன் ஆயிரக்கணக்கான தன்பாலின ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை பெருமிதப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து இருந்தது நிலையில், அதனை மீறி அவர்களது பேரணி தொடங்கியது.
இதனையடுத்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, தடையை மீறி பேரணி நடத்திய தன்பாலின உறவாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது கண்ணீர் குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT