Published : 15 Jun 2015 08:32 AM
Last Updated : 15 Jun 2015 08:32 AM
ஜார்ஜியா நாட்டின் தலைநகர் திபிலீசியில் கனமழையால் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால் அங்குள்ள சரணாலயத்தில் அடைக்கப்பட்டிருந்த சிங்கம், புலி, நீர்யானை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதுவரை விலங்குகள் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஐரோப்பா மேற்கு ஆசியாவை இணைக்கும் நாடான ஜார்ஜியா, கருங்கடலின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. இது முன்னாள் சோவியத் குடியரசாகும்.
இந்த நாட்டின் தலைநகர் திபிலீசியில் தற்போது கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள சரணாலயத்தில் வெள்ளம் புகுந்து பாதுகாப்பு அரண்கள் உடைந்தன. இதனால் சிங்கம், புலி, நீர்யானை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் தப்பி ஊருக்குள் புகுந்துவிட்டன. இதில் சில விலங்குகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மற்றவை ஊருக்குள் நடமாடுகின்றன.
சிங்கம், புலி தாக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10 பேரை காணவில்லை. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஜார்ஜியா அரசு அறிவுறுத்தியுள்ளது. தப்பிச் சென்ற விலங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT