Published : 14 Jun 2015 12:06 PM
Last Updated : 14 Jun 2015 12:06 PM
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ் டீன், சார்புக் கோட்பாடுகள் குறித்து தனது மகனுக்கு எழுதிய கடிதம் 62,500 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.37 லட்சம்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள 'புரொஃ பைல்ஸ் இன் ஹிஸ்டரி' எனும் ஏல அமைப்பு ஐன்ஸ்டீன் எழுதிய 27 கடிதங்களை ஏலம் விட்டது. அவற்றில் சார்புக் கோட்பாடு குறித்த கடிதம் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அனைத்துக் கடிதங்களும் 4,20,000 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.2 கோடி) விற்பனையாகின.
கடவுள் குறித்து மனிதனின் எண்ணங்கள் தொடர்பாக எழுதப்பட்ட இரண்டு கடிதங்களில் ஒன்று 28,125 அமெரிக்க டாலர்களுக்கும் (சுமார் ரூ.16 லட்சம்), மற்றொன்று 34,375 அமெரிக்க டாலர்களுக்கும் (சுமார் ரூ.20 லட்சம்) விற்பனையாகின.
இந்தக் கடிதங்கள் எல்லாம் தனது அடையாளத்தைத் தெரியப்படுத்த விரும்பாத ஒருவர் பல காலமாகச் சேகரித்தது என்றும், இவற்றை பல தனி நபர்கள் ஏலத்தில் எடுத்திருப் பதாகவும் மேற்கண்ட ஏல அமைப்பின் நிறுவனர் ஜோசப் மதலேனா கூறியுள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT