Published : 08 Jun 2015 02:14 PM
Last Updated : 08 Jun 2015 02:14 PM
ஏமன் ராணுவ தளத்தின் மீது சவுதி அரேபிய படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமன் நாட்டை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதி அரேபிய கூட்டமைப்பு படைகள் கடந்த மார்ச் மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏமனில் தலைநகர் சனா உட்பட முக்கிய பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன.
இந்த நிலையில் அந்த நாட்டின் ராணுவ தளத்தின் மீது சவுதி படைகள் தொடர் தாக்குதல் நடத்தினர். ஞாயிற்றுகிழமை அதிகாலை அளவில் வான்வழித் தாக்குதல் தொடங்கப்பட்டதாக அங்கு வாழும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் 22 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT