Last Updated : 06 Jun, 2015 10:21 AM

 

Published : 06 Jun 2015 10:21 AM
Last Updated : 06 Jun 2015 10:21 AM

மலேசியாவில் நிலநடுக்கம்- 5 பேர் பலி?

மலேசியாவின் சபா மாநிலத்தில் மலையேற்றப் பயிற்சிக்கு புகழ் பெற்ற கினாபலு மலைக்கு அருகே நேற்று 5.9 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் மலே யேற்ற வீரர்கள் 5 பேர் இறந்திருக்க லாம் என அஞ்சப்படுகிறது.

சபா மாநிலத் தலைநகர் கோட்டா கினாபலுவுக்கு கிழக்கே 54 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழப் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று காலை 7.17 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் கினாபலு மலை சுமார் 1 நிமிடம் குலுங்கியதால் பெருமள வில் பாறைச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்து தப்பி அடிவார முகாமுக்கு வந்தவர்கள் அளித்த தகவலின்படி, 5 பேர் பலத்த காயத்தால் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மலையில் ஆங்காங்கே சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடாத், கோட்டா மருடு ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x