Published : 18 Jun 2015 01:11 PM
Last Updated : 18 Jun 2015 01:11 PM
தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் 'மெர்ஸ்' நோய் தாக்கி மேலும் 3 பேர் பலியாகினர். இதுவரை 165 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மெர்ஸ் வைரஸின் தாக்கம் மிக அதிக அளவிலும், சிக்கல் மிகுந்ததாகவும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் மேலும் 3 பேர் மெர்ஸ் நோய்க்கு பலியானதாக தென் கொரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதன் மூலம் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
அதிபர் பார்க் ஜியுனுக்கு எதிர்ப்பு
தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் நோய் அறிகுறிகளுடன் இருக்கும் சுமார் 5,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்று வல்லுநர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கான உரிய நோய் தற்காப்பு நடவடிக்கைகள் வழங்கப்படுவதாக தெரியவில்லை என்று அதிபர் பார்க் ஜியுனுக்கு எதிரான கருத்தை தென் கொரிய அதிபர் கேங் சியாங் ஹீயும் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 20-ம் தேதி சவுதி அரேபியாவிலிருந்து தென் கொரியா திரும்பிய நபருக்கு முதன் முதலில் 'மெர்ஸ்' (மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோய்) தாக்கியது கண்டறியப்பட்டது.
சவுதி அரேபியாவுக்கு வெளியே, "மெர்ஸ்' வைரஸ் இவ்வளவு அதிக அளவில் பரவியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT