Published : 17 Jun 2015 10:39 AM
Last Updated : 17 Jun 2015 10:39 AM
ஜார்ஜியா நாட்டுத் தலைநகரான திபிலிசியில் உள்ள வெர் ஆற்றில் சில நாட்களுக்கு முன்னர் வெள்ளம் ஏற்பட்டது. அதில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று கைப்பற்றப்பட்டன. இதனால் இந்த வெள்ளத்துக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வெள்ளம் காரணமாக சுமார் 20 பேர் மாயமாகி உள்ளனர் என்று முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது குறைந்து 9 பேர் மட்டும் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தவிர, இந்த ஆற்றுக்கு அருகில் அமைந்திருந்த மிருகக்காட்சி சாலையிலும் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த பல விலங்குகள் இறந்தோ அல்லது காணாமலோ போயிருக்கின்றன.
மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 விலங்குகளில் பாதிக்கும் மேலான பறவைகளும் மீன் களும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
குரங்குகள், பெங்குவின்கள் போன்றவை வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிங்கம், புலி மற்றும் நீர்யானை போன்ற விலங்குகள் தப்பித்தாலும், அவற்றை மீண்டும் கைப்பற்றி மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு வரப் பட்டுள்ளன.
வெள்ளத்தால் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஊருக்குள் புகுந்த விலங்குகளில் இரண்டு புலிகள், ஒரு கரடி மற்றும் ஒரு குள்ள நரி ஆகியவை காணாமல் போய் உள்ளன. அவற்றைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மிருகக்காட்சி சாலை இயக்குநர் சுராப் குரியலீட்ஸ் கூறும்போது, "முடிந்த அளவு அனைத்து மிருகங்களை யும் பாதுகாக்கத் தேவைப்படும் எல்லா முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன.
மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சிங்கம் மற்றும் புலி போன்ற மிருகங்களை மட்டும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்" என்றார்.
இந்த வெள்ளத்தால் இங்கு பணியாற்றி வந்த பெண் உட்பட மூன்று ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT