Published : 01 May 2015 02:32 PM
Last Updated : 01 May 2015 02:32 PM

நேபாள நிலநடுக்கம்: 5 நாட்களுக்குப் பின்னர் இளம் பெண் மீட்பு

நேபாள நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 24 வயது இளம் பெண் ஒருவர் 128 மணி நேரம், அதாவது ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 25-ம் தேதி, நேபாளத்தில் ரிக்டரில் 7.9 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6,000-ஐ தாண்டிவிட்டது.

இந்நிலையில் கொங்காபு கிராமத்தில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து 24 வயது இளம் பெண் ஒருவர் 128 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நேபாள, இஸ்ரேலிய கூட்டுப்படை அந்த இளம் பெண்ணை மீட்டுள்ளது. மீட்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் பெயர் கிருஷ்ண குமாரி கட்கா எனத் தெரியவந்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் நிறைவடைந்துவிட்ட நிலையிலும் மீட்பு, நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறவில்லை எனக்கூறி நேபாள மக்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x