Published : 19 May 2015 02:06 PM
Last Updated : 19 May 2015 02:06 PM
மரண தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் தேவை என்று சவுதி அரேபிய அரசு விளம்பரம் செய்துள்ளது.
சவுதி அரேபியாவில் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்த நிலையில், தண்டனையை நிறைவேற்ற போதிய ஆட்கள் அந்த அரசிடம் தற்போது இல்லை. இதனால் சவுதி அரேபியா தனது அரசு செய்தி நிறுவனத்தின் மூலமாக தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்தியுள்ளது.
"காலியாக இருக்கும் 8 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. இஸ்லாமிய ஷரியத் சட்டம் தெரிந்த தகுதி மட்டுமே போதுமானது" என்ற அந்த விளம்பரம் குறித்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலை ஆட்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் அதிகபட்ச குற்றங்களுக்கு, பொதுமக்கள் முன்னிலையில் தலையை துண்டித்து மரண தண்டனை வழங்கும் வழக்கம். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டின் 85-வது மரண தண்டனை ஒன்று கடந்த ஞாயிற்றுகிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டில் மொத்தமாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை எண்ணிக்கையை இந்த ஆண்டுக்கான மரண தண்டனை எண்ணிக்கை 2015-ம் ஆண்டு தொடங்கிய 5 மாதத்தில் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை நிறைவேற்றுவதில் கடந்த 2014ம் ஆண்டில் சீனா மற்றும் ஈரானை தொடர்ந்து சவுதி அரேபியா மூன்றாவது இடத்தை பிடித்தது.
தண்டனை அதிகரிக்க காரணம்?
சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளை கவலையடைய செய்துள்ளது.
இதனிடையே, மரண தண்டனை எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும், அதிக அளவில் நீதிபதிகள் நிறைவேற்றப்பட்டதால் தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்படுவதாகவும் சவுதி அரசு அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT