Last Updated : 03 May, 2015 10:37 AM

 

Published : 03 May 2015 10:37 AM
Last Updated : 03 May 2015 10:37 AM

நேபாளத்தில் பலி எண்ணிக்கை 7,250 ஆக உயர்வு: 9-வது நாளாக நில அதிர்வு தொடர்கிறது

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,250 ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் ஒன்பதாவது நாளாக நேற்றும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 4.5 ஆகப் பதிவானது.

நேபாளத்தில் கடந்த 25-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.9 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக் கத்தில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகை யில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,250 ஆக அதிகரித்திருப்பதாக நேபாள அரசு நேற்று அதிகார பூர்வமாக அறிவித்தது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 28 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஒட்டுமொத்த மாக அந்த நாடு முழுவதும் 80 லட்சத் துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். சுமார் 1.26 லட்சம் குழந்தைகளுக்கும் 1.85 லட்சம் கர்ப்பிணிகள், தாய்மார்களுக் கும் மருத்துவச் சிகிச்சை, ஊட்டச் சத்தான உணவு தேவைப்படுகிறது. சுமார் 42 லட்சம் பேர் சுகாதாரமான குடிநீர் இன்றி தொற்றுநோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். 1.6 லட்சம் வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. 1.43 லட்சம் வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன.

105 வயது முதியவர் மீட்பு

மீட்புக் குழுவினரை ஆச்சரியப் படுத்தும் வகையில் நவோகாட் பகுதியில் பான்சு காலே என்ற 105 வயது முதியவர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டார். கட்டிட இடிபாடுகளில் புதைந்து கிடந்த அவருக்கு காலில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஹெலி காப்டர் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வெளிநாட்டினர் உடல்கள் மீட்பு

இந்நிலையில் மலைமுகடு பகுதிகளில் கடும் சிரமத்துக்கு இடையே நேற்று 50 மலை யேற்ற வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளி நாட்டினர் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x