Last Updated : 25 May, 2015 12:29 PM

 

Published : 25 May 2015 12:29 PM
Last Updated : 25 May 2015 12:29 PM

ஜப்பானில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

ஜப்பானின் வடகிழக்கே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கே சைத்தாமா என்ற பகுதியில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் இதுவரையில் இல்லை.

சுனாமி எச்சரிக்கைக்கு அவசியம் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடாக டோக்கியோ எங்கும் ரயில் போக்குவரத்தும் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2011-ல் ஜப்பானில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x