Published : 16 May 2015 10:49 AM
Last Updated : 16 May 2015 10:49 AM
இந்தோனேசிய கடல் பகுதியில் நடுக்கடலில் தத்தளித்த 700 பேரை அந்த நாட்டு கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர்.
மியான்மர் நாட்டில் முஸ்லிம் களுக்கு எதிரான கலவரம் தீவிரம் அடைந்து வருகிறது. எனவே அந்த நாட்டில் வசிக்கும் முஸ்லிம் கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோத மாக குடியேறி வருகின்றனர்.
அண்மையில் இரண்டு பெரிய படகுகளில் சுமார் 700 பேர் மியான்மர் நாட்டில் இருந்து மலேசி யாவுக்கு புறப்பட்டனர். ஆனால் மலேசிய கடற்படையினர் தங்கள் கடல் பகுதிக்குள் நுழையவிடாமல் அவர்களை தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் தாய்லாந்து கடற்படையினரும் அகதிகளை விரட்டியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடுக்கடலில் தத்தளித்த அவர்கள் இந்தோனேசியாவின் ஆசக் கடல் எல்லையில் நுழைந்த னர். அப்போது ஒரு படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. இதை பார்த்த உள்ளூர் மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்து இந்தோனேசிய கடற் படையினரும் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர் களை மீட்டனர்.
தற்போது 700 பேரும் கோலா லங்காசா துறை முகப் பகுதியில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அவர்களோடு மேலும் ஒரு படகும் வந் துள்ளது. அந்தப் படகில் சுமார் 300 பேர் இருந்துள்ளனர். அவர்களின் படகு தாய்லாந்து கடல்பகுதியில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் படகு என்னவானது, அதில் இருந்தவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் தங்கள் எல்லைக்குள் நுழைய முற்படும் மியான்மர் அகதிகளை தொடர்ந்து விரட்டி வருகின்றனர். ஆனால் மியான்மர் முஸ்லிம்கள் தொடர்ந்து கடல்மார்க்கமாக வெளி நாடுகளில் குடியேற முயற்சித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று ஐ.நா. சபை கோரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT