Last Updated : 08 May, 2015 10:14 AM

 

Published : 08 May 2015 10:14 AM
Last Updated : 08 May 2015 10:14 AM

ரோம் சர்வதேச விமான நிலையத்தில் தீ

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள பியுமிசினோ சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப் பட்டனர். விமான நிலைய பணி யாளர்கள் பலரும் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்டனர்.

தீ விபத்தில் விமான நிலையத் தின் ஒரு முனையமும், கடைகள் சிலவும் சேதமடைந்தன. பயணி களின் லக்கேஜ்களை வைக்கும் இடத்தில் முதலில் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

எதனால் தீ ஏற்பட்டது என் பதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதில் தீவிரவாத சதி ஏதேனும் இருக்குமா என்ற நோக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.30 மணியளவில் தீ பற்றியது. தீ பரவத் தொடங்கியதும், பயணிகள் அனைவரும் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். விரைந்து வந்த சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் வரை போராடி தீயை முழுமையாக அணைத்தனர். பகல் 2 மணிக்குப் பிறகு பயணிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து காரணமாக உள்ளூர் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன. சர்வதேச விமானங்கள் காலதாமதமாக சென்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x