Last Updated : 05 May, 2015 12:36 PM

 

Published : 05 May 2015 12:36 PM
Last Updated : 05 May 2015 12:36 PM

நபிகள் கார்ட்டூன் போட்டி நடந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு: ஐ.எஸ்.ஸுக்கு தொடர்பு

அமெரிக்காவில் முகமது நபி குறித்து கார்ட்டூன் போட்டி நடத்திய அருங்காட்சியகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு முன்னர், அந்த நபரில் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விவரங்களை தெரிவித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸ் அருகே இருக்கும் கார்லேண்ட் நகரில் "கர்டிஸ் கல்வெல் சென்டர்" என்ற அரங்கில், முகமது நபி குறித்து கார்ட்டூன் வரையும் போட்டி ஞாயிற்றுகிழமை நடத்தப்பட்டது.

அப்போது அந்த அருங்காட்சியகத்தின் மீது மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். தொடர் சண்டையில் மர்ம நபர்கள் இருவரும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபர்களின் பெயர் எல்டான் சிம்சன் மற்றும் நாதி சூஃபி என்றும் தெரியவந்துள்ளது.

இதில் ஒருவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து தாக்குதல் தொடர்பான விவரங்கள், சம்பவம் நடப்பதற்கு முன்பு பகிரப்பட்டதாகவும் இவர்களுக்கு ஐ.எஸ். தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், சிம்சன் என்ற நபர், 2011-ல் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பொய் ஆதாரம் வழங்கியதன் குற்றத்துக்காக அமெரிக்க அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த நபர் என்ற அமெரிக்க புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x