Published : 21 May 2015 03:58 PM
Last Updated : 21 May 2015 03:58 PM
தாய்லாந்தில் யானையுடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டிருந்தவரின் செல்ஃபோனை பிடுங்கி யானையே எடுத்த 'எல்ஃபீ' படம் இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறது.
தாய்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் லே ப்ளாங்க் கொலம்பியா பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் மாணவர். கடந்த 2 மாதங்களாக இவர் காட்டுப் பகுதியில் தங்கி வருகிறார். அங்கிருக்கும் யானைகளிடம் பாசத்துடன் பழகும் அவர், யானைகளுக்கு வாழைப்பழங்களை ஊட்டிவிட்டார். திடீரென வாழைப்பழங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது.
உடனடியாக அந்த யானை, லே ப்ளாங்கின் கையில் இருந்த செல்ஃபோனை பிடுங்கிக் கொண்டது. செல்ஃபோன் கேமரா டைம்லேப்ஸ் மோடில் இயங்கிய நிலையில் அழகான செல்ஃபீ படம் கிளிக்கியது.
இப்போது இன்ஸ்டாகிராமில் யானை எடுத்து செல்ஃபீ 'எல்ஃபீ' என்ற பெயரில் வைரலாக பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT