Published : 29 May 2015 10:23 AM
Last Updated : 29 May 2015 10:23 AM
அமெரிக்காவின் பிரபல வணிக இதழான போர்ப்ஸ் `செல்வாக்கு மிக்க பெண்கள்' பட்டியல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் முதல் முறையாக அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் இடம்பிடித்துள்ளார். இவர் 65வது இடத்தில் உள்ளார்
சமீபத்தில் வெளியான `1989' என்கிற இவரின் இசைத் தொகுப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவரை ட்விட்டர் சமூக வலைதளத்தில் சுமார் 5 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.
நியூயார்க் சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக் கும் இவர், தன்னுடைய `வெல்கம் டு நியூயார்க்' எனும் தனிப் பாடல் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் நியூயார்க் நகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடையாக அளித்துவிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT