Published : 24 May 2015 12:11 PM
Last Updated : 24 May 2015 12:11 PM
பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவுகளில் நேற்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவை இரண்டும் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவாகியிருந்தன.
முதல் நிலநடுக்கம் கிராகிரா பகுதியில் இருந்து 205 கிலோமீட்டர் தொலைவிலும், தலைநகர் ஹோனியாரா பகுதியில் இருந்து 448 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, இரண்டாவது நிலநடுக்கம் கிராகிரா பகுதியில் இருந்து 159 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் சுனாமி ஆபத்து இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கங்கள் சாலமன் தீவுகளில் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT