Published : 17 May 2015 12:58 PM
Last Updated : 17 May 2015 12:58 PM
அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த தீவிரவாதி ஸோகர் சர்னேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்தார் ஸோகர் சர்னே (21). இவரும் இவரது சகோதரர் தமர்லானும் பாஸ்டனில் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 2 பிரசர் குக்கர் வெடிகுண்டுகளை வீசினர்.
இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாயினர். சுமார் 260 பேர் படுகாயமடைந்தனர். அப்போது போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் தமர்லான் கொல்லப்படார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 10 வாரங்களுக்கு மேலாக, 150க்கும் அதிகமான சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்து 25 மாதங்கள் கழித்து இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
சர்னேவுக்கு ஊசிமருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 9/11 தாக்குதலுக்குப் பிறகு மரண தண்டனை பெறும் முதல் தீவிரவாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT